“நகை வாங்க லலிதாவுக்கு வாங்கனு சொன்னது குத்தமா“ : 5 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி!!
28 January 2021, 6:42 pmசென்னை : பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் நகை அளவீடு செய்யும் பணி தினமும் நடைபெறும். அவ்வாறு நடந்த பணியின் போது, 5 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து நகைக்கடையின் கிளை மேலாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையல், கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் நகைக்கடையில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த் பிரவீன்குமார் சிங் என்பவர் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் அந்த சிசிடிவி காட்சியில், பாலிஸ் போட வைத்திருந்த நகைகளை பீரோவில் வைக்காமல், வேறு இடத்தில் வைத்ததும் தெரியவந்தது.
பின்னர் கடையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பிரவீன் நகைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியதும் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் கொண்டு மாயமான பிரவீன்குமார் சிங் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். லலிதா ஜூவல்லரிக்கு மட்டும் அடுத்தடுத்து துயரமான சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
0
0