ஒரே பைக்கில் 5 பேர்… ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து பள்ளி மாணவர்களின் சாகச பயணம்… நடவடிக்கை எடுக்கப்படுமா…?

Author: Babu Lakshmanan
12 October 2022, 1:48 pm

ஒருவர் மீது ஒருவர் என ஒரே இருசக்கர வாகத்தில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் 5 பேர் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தவாரு ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் மிக ஆபத்தான சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பார்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், வீடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் கொடுத்தால், அவர்களின் பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ஆபத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருப்பது கல்வியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!