போனஸ் கேட்டா தரமாட்டியா? கடை முன் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 2:13 pm
Garbage in shop -Updatenews360
Quick Share

தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளிா்ன சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் எல்.இ.டி கடை நடத்தி வருபவர் ஜேம்ஸ். இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவரிடம், கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் வாங்க தருகிறேன் என கூறியுள்ளார். 500 ரூபாய் கேட்டு அவர் தொந்தரவு செய்யவே, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் கடை அருகே இருந்த குப்பையை எடுத்து , கடை முன்பு போடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு , கொடுக்காத கடை முன்பு, தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக இருப்பதாக வியாபரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் வலுக்கட்டாயமாக, வியாபரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மையாக பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மதிக்கப்படுவார்கள் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 417

0

0