‘பார்சலில் பிரியாணிக்கு பதில் பரோட்டா’… கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஓட்டல் உரிமையாளர்..!!

Author: Babu Lakshmanan
27 ஏப்ரல் 2024, 12:01 மணி
Quick Share

லைனில் ஆர்டர் செய்த உணவுக்கு பதிலாக வேறு உணவை அனுப்பி வைத்த உணவக உரிமையாளரிடம் நேரில் சென்று கேட்ட வாடிக்கையாளரிடம், உணவக உரிமையாளர் மிரட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஜொமேட்டோ மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பழனி – திண்டுக்கல் சாலையில் பைபாஸ் எதிரே அமைந்துள்ள ஹோட்டல் லட்சுமி என்ற உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்டு, அதற்கான பணமும் ஆன்லைன் மூலமாக செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க: ‘கைய பிடிக்காத சார்…. தப்பு சார்’…. அரசு மருத்துவமனையில் காவலரை வம்புக்கு இழுத்த போதை இளைஞர்!!

ஆர்டர் செய்த சில சில நிமிடங்களில் உணவும் வீடு தேடி வந்தது. உணவை பிரித்து பார்த்த பொழுது அதில் பரோட்டா இருந்தது. இதனால் குழப்பமடைந்த வாடிக்கையாளர் ஜொமேட்டோ செயலியில் பதிவு செய்யப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட உணவகத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண் தவறானது என்றும், வேறு நபருடைய செல்போன் எண் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட லட்சுமி உணவகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த உரிமையாளரிடம் கேட்டார். அப்போது, “இதையெல்லாம் நீங்கள் நேரில் வந்து கேட்கக்கூடாது என்றும், நீங்கள் ஆர்டர் செய்த ஆன்லைனிலேயே தொடர்பு எண் உள்ளது என்றும், அதில் தொடர்பு கொண்டு தான் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் செயலியில் நீங்கள் பதிவு செய்துள்ள எண் தவறான எண் என்றும், அதை தொடர்பு கொண்ட போது வேறு நபர் ஒருவர் பேசுகிறார் என்றும் வாடிக்கையாளர் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த எண் எங்களது எண் இல்லை, இதற்கு முன் கடை வைத்திருந்த உரிமையாளர் உடையதாக இருக்கும் என்றும், எனவே இது குறித்து எங்களிடம் கேட்க கூடாது என்றும் தெரிவித்தார்.

90 ரூபாய் மதிப்புள்ள உணவிற்கு 40 ரூபாய் மதிப்பிலான உணவை கொடுத்துவிட்டு உணவு உணவாக உரிமையாளர் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று கூறி கடையில் இருந்த ஊழியர்கள் வாடிக்கையாளரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதை தனது செல்போனில் படம் எடுத்த வாடிக்கையாளர்களிடம் செல்போனை பிடுங்கி உடைத்து விடுவேன் என்றும், ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஆன்லைனில் தான் கேட்க வேண்டும் நேரில் வரக்கூடாது என்றும் உணவக உரிமையாளர் மிரட்டும் வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.

ஷொமேட்டோ, ஸ்விக்கி போன்ற பிரபலமான செயலிகளின் மூலம் ஆர்டர் செய்தால் உணவுகள் தரமாகவும், நேர்மையாகவும் வந்து சேரும் என்ற நம்பிக்கையை, இதுபோன்ற தரமற்ற உணவகங்களின் செயல்பாடுகள் வீணாக்கி விடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Vanathi CM வாழ்த்து சொல்லுவதே இல்ல.. விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் சொல்லணும் ; வானதி சீனிவாசன் பொளேர்!
  • Views: - 196

    0

    0