படத்தை பார்த்தால் போதும் அச்சு அசல் தத்ரூபமாக வரையும் இளைஞர் : 4 மணி நேரத்தில் 150 படங்கள்.. சாதனை செய்ய முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 8:25 pm
Youth Drawing - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் 4 மணி நேரத்தில் 150 படங்களுக்கு மேல் ஓவியம் வரைந்து சாதனை படைக்க முயற்சி ..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்டது.

கொரோனா குறைந்ததன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் மெல்ல வர துவங்கி உள்ளனர். கொடைக்கானலை பொறுத்த வரையில் பெரும்பாலான மக்கள் சுற்றுலாவையும் சுற்றுலா சார்ந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டு சிறு வயது முதலே ஓவியம் வரைந்து வருகிறார். கொடைக்கானலில் வசித்து வரும் இவர் இங்கு வரும் பயணிகளுக்கு அவர்களின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து கொடுத்து தொழில் நடத்தி வருகிறார்.

சுமார் நான்கு ஆண்டு காலமாக கொடைக்கானலில் ஓவிய தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் பெற்று படங்கள் வரைந்து அனுப்பியும் வருகிறார். தத்ரூபமாக வரைந்து கொடுத்து வருவதால் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

ஓவியத்தின் மூலம் சாதனை படைக்க வேண்டும் என முயற்சியில் ஈடுபட்ட அவர் தலைவர்கள், சினிமா நடிகர்கள் , முக்கிய பிரபலங்கள் ஆகியோரின் புகைப்படங்களை சுமார் 4 மணி நேரத்தில் 150 படங்களுக்கு மேல் ஒரே சார்ட் பேப்பரில் வரைந்து சர்வதேச புக் ஆப் ரெகார்ஸ் இல் இடம் பெறவும் முயற்சி செய்து வருகிறார்.

Views: - 301

0

0