அரசுப்பேருந்து மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பரிதாப பலி..!!

1 February 2021, 8:38 am
accident - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி: காவிரிப்பட்டணம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த அரசுப்பேருந்து மீது வேன் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி காவிரிப்பட்டணம் பகுதியில் சாலையோரம் அரசுப்பேருந்து ஒன்று நின்றிருந்தது. அப்போது அவ்வழியே வந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஆம்னி வேன் அரசுப்பேருந்தின் பின்புறம் மோதியதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடலை மீட்டு காவிரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

Views: - 18

0

0