டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி : மதுரையில் அடுத்தடுத்து சிறுவர்கள் இறப்பால் அச்சம்!!

7 February 2021, 4:52 pm
Dengue Dead - Updatenews360
Quick Share

மதுரை : ஆலங்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் 2 வது மகன் திருமலேஷ் கடந்த மாதம் 22 ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தநிலையில் , மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதே ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவரது 6 வயது மகனான சாய்சரணுக்கு கடந்த 3 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்த நிலையில் , தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் சாய்சரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1

0

0