8 வயது சிறுமியிடம் ‘பாலியல் சீண்டல்‘ : 65 வயது முதியவர் கைது!!

Author: Udayachandran
9 October 2020, 3:21 pm
Abged Person Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் பலசரக்கு கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த நேசமணி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியில் ஸ்ரீ சிவசக்தி என்ற பெயரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு இவரது கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பொருட்கள் வாங்க வநத போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வீட்டில் சென்று தாயிடம் சொல்லி அழுததையடுத்து, உறவினர்களுடன் அந்த கடையை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் தொடர்ந்து இன்று காலை குழித்துறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் நேசமணியை கைது செய்தனர்.

Views: - 45

0

0