கோவையில் கொரோனா சிகிச்சையில் இருந்து இன்று 670 பேர் டிஸ்சார்ஜ்

Author: Udayaraman
15 October 2020, 9:08 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 670 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை காட்டிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 670 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 33 ஆயிரத்து 775 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா சிகிச்சை மையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 426 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநில சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியிலில் கோவை ஊரகம், நகரப் பகுதிகளை சேர்ந்த 395 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 59 வயது பெண், 62, 68 வயது முதியவர்கள் ஆகிய 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 43

0

0