திருப்பூரில் 7.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ஓட்டுநரை கைது செய்து விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 2:42 pm
Ration Rice Seized - Updatenews360
Quick Share

திருப்பூர் : செரங்காட்டில் வேனில் கடத்தப்பட்ட 150 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஒட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் – செரங்காடு பகுதியில், ரேசன் அரிசி  கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமைப்பொருள் 
பறக்கும்படையினருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் குடிமைப்பொருள் பறக்கும்படை, தாசில்தார் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் செரங்காடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அந்தப்பகுதியில் வேன் ஒன்றில் ரேசன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்படுவதை பறக்கும்படையினர் உறுதி செய்தனர். இதையடுத்து வேனில் இருந்த 7.5 டன் அளவிலான 150 ரேசன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வேன் டிரைவரை பிடித்து, ரேசன் அரிசியை கடத்தியவர் யார் என்பது குறித்து விசாரணை  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 354

0

0