பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநர் இன்று முக்கிய முடிவு??

29 January 2021, 1:35 pm
Rajiv Case governor - Updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரளிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

Guv can decide on release of Rajiv case convicts: Centre - DTNext.in

இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை தொடர்ந்து ஆளுநருரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில் ஆளுநரின் முடிவு குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது.

Banwarilal Purohit to be sworn in as TN Guv tomorrow | Deccan Herald

இதையடுத்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என ஒரு வார கால அவகாசம் கொடுத்தது.

Coronavirus: Lawyers urge CJI to shut SC; court resorts to video  conferencing

இன்று ஒருவார காலம் அவகாசம் நிறைவடைந்த நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Diarchy in Tamil Nadu

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் இதற்காக ஆளுநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இன்று அல்லது நாளை நல்ல முடிவு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0