மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியம்… 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 மாணவர்கள் இணைந்து அசத்தல்

Author: Babu Lakshmanan
9 August 2022, 4:47 pm
Quick Share

வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 75 கல்லூரி மாணவ மாணவிகள், மகாத்மா காந்தியின் பிரமாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு வருகின்ற 12ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை மார்த்தாண்டத்தில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 75வது சுதந்திர தினம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகத்தை உணர்த்தும் விதமாகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கலை நிகழ்வுகளை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்வில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, 75 மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் மகாத்மா காந்தியின் மெகா ஓவியம் வரையப்பட்டது.

பின்னர், வண்ணம் தீட்டி பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Views: - 536

0

0