சென்னையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பயணிகள் படுகாயம்…தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது..!!

Author: Aarthi Sivakumar
2 August 2021, 12:45 pm
Quick Share

சென்னை: தூக்கக் கலக்கத்தில் அரசு பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் பாலத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து ரெட்ஹில்ஸ் வரையிலான தடம் எண் 114 எண்ணை கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் , பேருந்தை சேகர் (50) என்ற ஓட்டுனர் இயக்கி வந்துள்ளார்.

கோயம்பேட்டில் இருந்து சென்னை மாதவரம் ரவுண்டா அருகில் பேருந்து வந்த போது திடீரென அங்கிருந்த மேம்பால சுவரில் மோதி உள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணித்த 8 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் , இச்சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் விசாரணையில், அரசு பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதாக தெரிய வந்துள்ளது. ஓட்டுனரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 292

0

0