தேர்வு எழுதிய 90% பேர் ‘ஃபெயில்’: மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறதா வேளாண் பல்கலை.,..?

Author: Aarthi Sivakumar
8 December 2021, 10:49 am
Quick Share

கோவை: அரியா் தோ்வு எழுதிய 90 சதவீத மாணவா்களை வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்ச்சி பெற வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்காக கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இணைய வழியில் அரியா் தோ்வு நடைபெற்றது.

இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதன் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை.

இணைய வழி நடைபெற்ற தோ்வில் மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதனால் தான் தேர்வில் தோல்வியை சந்தித்தனர் என்றும் பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், இணைய வழி தேர்வுக்கான செயலியில் குறைபாடு இருந்த காரணத்தாலே இந்த பிரச்சனை எழுந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தங்களின் எதிர்காலத்தை நினைத்த அச்சம் கொண்ட வேளாண் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனாலும், பல்கலைக்கழக நிர்வாகம் முறையான பதில் தரவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

படித்து முடித்து பல ஆண்டுகளாகியும் பட்டம் பெற முடியாததால் கண்ணீர் விடும் மாணவர்கள் இதுகுறித்து தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Views: - 197

0

0