பழனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 900 அரிசி மூட்டைகள் மாயம் ; 5 பேர் பணியிடை நீக்கம் செய்து அதிரடி..!

Author: Babu Lakshmanan
14 September 2022, 11:05 am
Quick Share

பழனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் 900 அரிசி மூட்டைகள் மாயமானதால் 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. உரம், அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இருப்பு வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளில் சுமார் 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அரிசி மூட்டை மாயமானது குறித்து மண்டல உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கபட்டது.

இதை அடுத்து நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக நுகர் பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவிப் பொறுப்பாளர் ஜெயசங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி, பட்டியல் எழுத்தர் ஆறுமுகம், உலகநாதன் ஆகிய 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 900 மூட்டைகள் அரிசி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 455

0

0