சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்: 10 மாதங்களாக நீடிக்கும் தடை…!!

17 January 2021, 2:40 pm
chinna suruli - updatenews360
Quick Share

சின்னசுருளி அருவிக்கு வரும் மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்துவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் மேகமலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடைவிதித்தனர். பெரும்பாலான சுற்றுலா தளங்களில் மக்கள் செல்ல அனுமதி வழங்கிய நிலையில் சின்னசுருளி அருவியில் தடை உத்தரவு இதுவரையில் நீடித்து வருகிறது.

இதனால் சின்னசுருளி அருவிக்கு வரும் பயணிகள் வனத்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். தற்போது தொடர் மழையால் சின்னசுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் நிலையில், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத காரணத்தால், அருவிக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அனைத்து சுற்றுலா தளங்களிலும் தடை உத்தரவு நீக்கப்பட்டதை போல, சின்னசுருளி அருவியிலும் தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 6

0

0