16 வயது சிறுமி 9 மாத கர்ப்பம்… சிக்கிய 18 வயது மாணவன் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 1:31 pm

16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 18 வயது ஐடிஐ மாணவன் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐயில் படித்து வருகிறான்

மாணவன் வீட்டு அருகே 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ,பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத போது ஐடிஐ மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இது குறித்து சிறுமி அவரது பெற்றோருடன் தெரிவித்துள்ளனர். அதன்படி பெற்றோர்கள் வேலூர் சமூக பாதுகாப்பு நலத்துறை அலுவலகத்திற்கு புகார் அளித்தனர்.

அதன்படி அதிகாரிகள் விசாரணை செய்ததில் சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல சமூக பாதுகாப்பு நலத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்

இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மாணவனை கைது செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?