70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : 26 வயது இளைஞருக்கு அதிரடி தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 3:26 pm
Crime judgement - Updatenews360
Quick Share

கடந்த 2019 ஆம் ஆண்டு 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் வாழ்நாள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ஊராட்சியில் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த கவிதாஸ் (வயது 26) என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு வாழ்நாள் வரை (இயற்கை மரணம் வரை) சிறை தண்டனை விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு அளித்துள்ளார்

Views: - 115

0

0