கழிவுநீர் ஓடையில் பச்சிளம் குழந்தை.. இறந்து கிடந்ததால் அதிர்ச்சி : போலீசார் விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 5:58 pm

கழிவுநீர் ஓடையில் பச்சிளம் குழந்தை.. இறந்து கிடந்ததால் அதிர்ச்சி : போலீசார் விசாரணையில் ஷாக்!

மதுரை கோச்சடை நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியில் உள்ளது முடக்கு சாலை . இந்தப் பகுதிக்கு அருகே உள்ள பெத்தானியாபுரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஃபாஸ்டின் நகர் சர்ச் அருகே பிறந்த குழந்தையின் உடல் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் இறந்த குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க: மாமியாரை அடிக்கடி ரகசியமாக சந்தித்த அண்ணன்.. பொங்கிய தம்பி : பட்டப்பகலில் நடந்த வெறிச்செயல்!

கழிவுநீர் கால்வாயில் கிடந்தது பெண் குழந்தை என்றும் காலை 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் அடிப்படையில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!