இந்து மாநாடுக்கு தடையா? திமுக கரை வேட்டி எந்த ஊரிலும் வராது : பரபரக்கும் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 11:23 am
DMK - Updatenews360
Quick Share

அகில பாரத இந்து மகா சபா சார்பில் சத்ரபதி சிவாஜி ஜென்ம திருவிழா மற்றும் இந்து எழுச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மங்குடி சாலையில் நேற்று நடந்தது.

மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில அலுவலக செயலாளர் கோவிந்தன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி வந்தாலே இந்துகளை கேலி கிண்டல் செய்வார்கள்.சூடு சொரணை உள்ள இந்துகள் திமுக வில் இருக்ககூடாது.அவர்களுக்கு ஒட்டு போடலாமா.

மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் வித்தியாசமானது. அவள் பத்திரகாளி. மண்டைகாடு என்றாலே கலவரம். வெள்ளைகார ஆட்சியில் கூட மாநாடு நடத்த நாலாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநில பாரம்பரிய நிகழ்ச்சி. அதனை தடுத்து குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று அறநிலையத்துறை அதிகாரிக்கு சொல்லியுள்ளோம். ஆனால் அவர் இது அரசாங்ககோயில் என்கிறார்.

கோயில் சொத்தில் அரசு நடக்கிறது. உண்டியலை நாங்கள் நிரப்புகிறோம். ஆனால் அதிகாரி நாங்கள் தான் மாநாடு நடத்துவோம். நீ வா இல்லை வராமல் போ.

அறநிலையத்துறை அதிகாரிகள் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுப்பார்களே ஆனால் சுசீந்திரத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இந்த மாநாடு எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது. தக்கலையில் காவடிக்கு தடை விதித்தார்கள்.ஆனால் என்ன நடந்தது. அமைச்சரே ஓடி விட்டார்.

ஆனால் மண்டைகாட்டில் மாநில மாநாடு நடத்தவிடாவிட்டால் திமுகவினரின் கரை வேட்டி எந்த ஊரிலும் வராது உருவிவிடுவோம் குமரி மாவட்டத்தில் திமுகவினர் கரைவேட்டி கட்ட முடியாது.

கரை வேட்டியை கிழித்த சம்பவம் உண்டு. இந்துகளுக்கு ஒரு சக்தி உண்டு.அமைதியாக இருப்பான். மண்டைகாடு ஷாக் அடிக்கும். கவனமாக இருக்கவேண்டும். இங்குள்ள அதிகாரிகள் செயலற்று இருக்கின்றார்கள். அவர்களை செயல்படுத்த வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 703

0

0