மறைந்த மயில்சாமியின் வீட்டில் பொறிக்கப்பட்ட வாசகம்.. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர்.. அறியாத தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 11:11 am
Mayilsamy - Updatenews360
Quick Share

நல்ல மனிதர், நல்ல குணம் கொண்டவர், வாரி வழங்கும் வள்ளல் என அவருக்கு நன்கு தெரிந்த மக்களால் அழைக்கப்பட்ட மயில்சாமி நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி மேலே வந்தவர்.

தன்னை போல் திறமையுடன் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பார். சிவபக்தரான அவர் எப்போதும் யாரை பார்த்தாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்து செல்வார்.

சிவனடியாராகவே மாறி தொண்டு செய்து வந்தார். அதோடு மழை, புயல், வெள்ளம் காலங்களில் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் ஏழை மக்கள் வயிறார உணவு சாப்பிடுகிறார்கள் என்றால் அது மயில்சாமி கொடுத்த உணவாக இருக்கும்.

வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் நடுவில் வாழும் காலத்தில் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைப்பார்.

தற்போதைய முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தான் மயில்சாமி மகன் திருமணத்தை நடத்தி வைத்தார். மயில்சாமியின் சம்பந்தி திமுகவில் முக்கியப் புள்ளியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டசபையின் துணை சபாநாயகராகவும் இருந்து வருகிறார்.

இருப்பினும் இது குறித்து எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் மயில்சாமி வாய் திறந்ததில்லை. எப்போதும் போல் நடிப்பை தொடர்ந்து வந்தார்.

அதை கொள்கையாகவே நினைத்து வாழ்ந்தவர் மயில்சாமி. மயில்சாமியின் வீட்டின் முகப்பில் நல்லவன் வாழ்வான் என்ற வாசகமும் மறு புறம் அன்பே கடவுள் இல்லம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

அது போல் அவரது வீட்டில் பெரிய சைஸில் விநாயகர் படமும் வைக்கப்பட்டுள்ளது. நல்லவன் வாழ்வான், அன்பே கடவுள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவம் ஆகும்.

இவரது உதவும் குணத்தை பார்க்கும் பிறர் தாமும் வாழ்வில் இப்படி உதவலாம் என்ற ஒரு இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்திவிட்டார் மயில்சாமி என்றே சொல்லலாம்.

ஒரு ஆர்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக வேட்டியை கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக தெரு ஓரம் உள்ள கடைகளில் டீ குடிப்பார் என்கிறார்கள்.

Views: - 376

0

1