நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 2:54 pm

நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!!

கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டப்பககில் பிரதான சாலையில் பிரனாவ் என்ற 18 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெட்டிக் கொலை செய்தவர் 17 வயது சிறுவன் என்பதும், கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு பின்னரே இது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் நிலையில் கொலை செய்து விட்டு தப்பிய சிறுவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளரிடம் விசாரித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!