கல்லூரி மாணவியுடன் உல்லாசம்… நேரில் பார்த்த சிறுவன் : ஓசூர் கொலையில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2025, 1:59 pm
ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் பாட்டீல் மற்றும் மஞ்சுளா தம்பதிக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவர்களது இளைய மகன் ரோகித்துக்கு 13 வயது. இவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார்.
அப்போது விளையாட சென்ற ரோகித் வீட்டுக்கு திரும்பவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படியுங்க: அரசு அதிகாரிகளுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டும் தவெக பெண் நிர்வாகி!!
அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு இளைஞர்கள் காரில் ரோகித்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ரோகித் சடலம் சாலையோர பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

மாதேவன் (வயது 21)
இந்த வழக்கில் அஞ்செட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த புட்டன்னா என்பவரது மகன் மாதேவன் (22) மற்றும் கர்நாடக மாநிலம் உனிசன அள்ளி பகுதியை சேர்ந்த மாரப்பா என்பவரது மகன் மாதேவா (21) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மாதேவா (வயது 21)
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாதேவன் மற்றும் அவரது காதலி ரதி (20) ஆகியோர் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோஹித் பார்த்து வெளியே கூறி விடுவான் என்றும் ரதியை ரோகித் அவதூறாக பேசியதால் ஆத்திரம் அடைந்த மாதவன் தனது நண்பன் மாதேவா உடன் சேர்ந்து சிறுவனை காரில் கடத்தி கொலை செய்ததாக தெரிகிறது.
இந்த வழக்கில் வாலிபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாதேவனின் காதலி ரதியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரியில் படித்து வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.