குளிர்பானத்தில் மயக்க மருந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…!!

4 December 2019, 10:06 pm
Pondy Rape-Updatenews360
Quick Share

புதுச்சேரி: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஸ்டூடியோ உரிமையாளரால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையாநகர், பாரதி வீதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் தனலட்சுமி(31). இவர் காந்தி வீதியில் வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரை என்பவர் நடத்தி வரும் போட்டோ ஸ்டூடியோவில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். மதுரைக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தனலட்சுமிக்கு குளிர்பானத்தில் மதுரை மயக்க மருந்தை கலந்துகொடுத்துள்ளார். இதில் மயங்கிய தனலட்சுமியை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து எழுந்த தனலட்சுமி தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அழுதுள்ளார். அப்போது மதுரை தனலட்சுமியை திருமணம் செய்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.இதனிடையே கடந்த 3 மாதத்திற்கு முன்னர் தனலட்சுமி வேலையை விட்டு நின்றுள்ளார். வீட்டில் தனலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதையடுத்து மதுரையும் தனலட்சுமிக்கு போன் செய்து தொல்லைகொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவிரக்தியடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.இதை பார்த்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின்போது தனலட்சுமி தன்னை ஒருவர் மயக்க மருந்து கொடுத்து சீரழித்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடன் போலீசாரும் நீதிமன்றத்தில் தெரிவித்து, நான்காவது குற்றவியல் பொறுப்பு நீதிபதி பி ஆர் சிவகுமார் மூலம் வாக்குமூலம் பெற ஏற்பாடு செய்தனர். அதன்படி நீதிபதியிடம் தனலட்சுமி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தான் வேலை பார்த்த போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளரான வம்பாகீரபாளையத்தை சேர்ந்த மதுரை குளிர்பானத்தில் மயக்க மருந்து தன்னை சீரழித்து விட்டதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் மதுரை மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.