சாலையில் விளையாடிய சிறுவனை ஆக்ரோஷமாக முட்டிய பசுமாடு: பதை பதைக்கும் சிசிடிவி காட்சி..!!

Author: Aarthi Sivakumar
18 September 2021, 5:57 pm
Quick Share

சென்னை: அம்பத்தூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு சிறுவனை முட்டித் தாக்கும் பதைபதைப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அம்பத்தூர் – வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் மகன் சரத் . இவன், தனது உறவினரின் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். அப்போது, தெருவில் கன்றுடன் சென்று கொண்டிருந்த பசுமாடு, திடீரென மிரண்டு சிறுவன் சரத்தை ஆக்ரோஷமாக முட்டியுள்ளது.

அப்போது சிறுவனின் அலறல் சத்தம்கேட்டு வெளியே வந்த பாட்டியையும் மாடு முட்டியுள்ளது.

வெளியே வந்த சிறுவனின் பாட்டியையும் மாடு முட்டியது. இதைக் கண்ட சிறுவனின் தந்தை தினேஷ் மாட்டை அங்கிருந்து விரட்டினார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. மாடு முட்டியதில் காயமடைந்த சிறுவன் சரத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

அம்பத்தூர் பகுதியில் ஏராளமான மாடுகள் வீதிகளில் சுற்றித்திரிவதால் இதுபோன்ற பாதிப்புகள் நேரிடுவதாகவும் அவற்றைத் தடுக்க வேண்டுமெனவும் அம்பத்தூர் மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுவனின் அலறல் சத்தக்கேட்டு அவரது தந்தை வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 158

0

0