‘கை’யில்லைனா என்ன? தன்னம்பிக்’கை’ இருக்கே… ஒரு கையில் சிலம்பத்தை சுற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2022, 12:53 pm

பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஊனம் ஒரு குறையல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய பள்ளி மாணவன் .

திருப்பூர், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

திருப்பூர், பல்லடம், உடுமலை காங்கேயம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

14,17,19 வயது பிரிவில் ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டைக்கம்பு சுற்றும் போட்டிகளும், வயதின் அடிப்படையில் எடைப்பிரிவில் தொடுமுறை போட்டிகளும் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்கள் மாநில அளவில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி19 முதல் 22 வரை அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப்போட்டிகள் புதிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்றுள்ளது.

இதனிடையே திருப்பூரில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் உடுமலைபேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவன் சபரிநாதன் தனது ஒரு கையுடன் கைத்தேர்ந்த சிலம்பாட்ட வீரர்களை விட ஒற்றைக்கம்பு விளையாட்டில் சிலம்பத்தை அநாயசமாக சுற்றி பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!