உணவு டெலிவரி நிறுவன ஊழியரை சாக்குப் பையில் கட்டி ரயில் தண்டவாளத்தில் வைத்து கொடூர தாக்குதல் : செல்போன், பணம் பறித்த கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 1:08 pm
Zomato Staff Attacked - Updatenews360
Quick Share

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விக்னேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் விக்னேஷ் டெலிவரி செய்ய சாய்பாபா காலனி பகுதியில் சென்றிருக்கின்றார்.

அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்றில் இருந்த இளைஞர்கள், டெலிவரி பாய் விக்னேஷிடம் எதற்காக வழி மறித்து முந்தி செல்கிறாய் என்று கேட்டு வம்பு இழுத்ததாக கூறப்படுகின்றன. மேலும் அவரை கண்ணப்ப நகர் தண்டவாளம் பகுதிக்கு அழைத்து சென்று கட்டி வைத்து சாக்கு பையில் தண்டவாள கருங் கற்கள் எடுத்து சரமாரியாக அடித்ததாக கூறப்படுகின்றன.

இதனால் அவர் முகத்தில், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து 22 ஆயிரம் மதிப்பிலான செல்போன் , 1500 ரொக்கம் திருடிக் கொண்டு டெலிவரி வாகனத்தை புதறில் தூக்கி எரிந்து விட்டு தப்பி சென்றனர்.

அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 236

0

0