பழிக்கு பழி.. மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக் கொலை : தடுக்க வந்தவருக்கும் வெட்டு..!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 11:49 am

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே பி.கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆட்டுக்குட்டிசுரேஷ் என்கிற சுரேஷ் (30). நேற்று இரவு தனது மனைவியுடன் திருச்சி ஏர்போர்ட் அருகே கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்த போது திடீரென அவர்களை சுற்றி வளைத்த 5பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் ஆட்டுக்குட்டி சுரேசை மனைவியின் கண் முன்னே தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டுக்குட்டி சுரேஷ் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். தடுக்கச் சென்ற அவர் மனைவியின் தாக்கினர். இதில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீரங்கம் காவல்துறையினர் அவரது மனைவியை தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சிறுமியை காதலிப்பதாக கூறி பல முறை உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!

சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தலை வெட்டி சந்திரமோகன் என்பவரை பட்டப் பகலில் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தலையைத் வெட்டி துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

அதற்குப் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் தற்போது தான் ஜாமினில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவத்தில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகி நந்தகுமார் (28), விமல் ராஜ் என்ற விமல் (24), சூரிய பிரகாஷ் என்கிற சூர்யா (31), பாலகிருஷ்ணன் (29), திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த ஜம்பு என்ற ஜம்புகேஸ்வரன்(36), ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தலை மறைவாக உள்ள ஹெல்மெட் பிரசாத் என்கிற பிரசாத் (19) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!