பிரபல பள்ளி, கல்லூரியை சூறையாடிய 50 பேர் கொண்ட கும்பல் : உரிமையாளரை தாக்கி வெறிச்செயல்!!

29 January 2021, 3:55 pm
Collge Damaged - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே பள்ளி , கல்லூரியை அடித்து உடைத்து கல்லூரி உரிமையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் உட்பட 50 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் பிரபல பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி , கல்லூரியின் ஒரு ஓரத்தில் பின்புறம் செல்லும் பாதை சம்மந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 50 பேருக்கு மேற்பட்ட ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரி காம்பவுண்டுக்குள் நுழைந்து பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தொடர்ந்து கல்லூரி உரிமையாளரும் முன்னாள் பேராசிரியருமான பிரான்சிஸ் என்பவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதில் அவருக்கு தலை மற்றும் இடுப்பு, கைகள் முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனே இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் காவல் நிலையத்திலோ அல்லது இன்ஸ்பெக்டரோ போனை எடுக்கவில்லை .மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் அவசர போலீஸ் 100 க்கு அழைத்துள்ளனர்.

அதன்பின்னர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு நள்ளிரவில் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தினார். சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் போலீசார் பள்ளி கல்லூரி வளாகத்துக்குள் வந்துள்ளனர்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பிரான்ஸ்- ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. ஏற்கனவே இந்த கும்பல் குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நட்டாலம் பஞ்சாயத்து தலைவர் ராஜகுமார் (வயது 45), ஜோசபாத் (வயது 35),ஷாஜி (வயது 30), அஜி (வயது 30), இறஞ்சிலாம் விளையை சேர்ந்த நவா(வயது 30), கர்ணன் (வயது 35),கழுவந்திட்டை சேர்ந்த ஜோயல் (40) உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0