தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கும்பல் நடத்திய நாடகம் : திகைக்க வைத்த திருப்பூர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2023, 11:40 am

தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கும்பல் நடத்திய நாடகம் : திகைக்க வைத்த திருப்பூர் சம்பவம்!!

திருப்பூர் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் பல்லடம் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அக்பர் சேட், மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த அசாருதீன் ஆகிய இருவரும் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்து வந்த இரண்டுபேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?