ஏறுமுகத்தை நோக்கி பங்குச்சந்தைகள்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்தது : இன்றைய வர்த்தக நிலவரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2023, 11:15 am
Sensex - Updatenews360
Quick Share

வாரத்தின்‌ தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள்‌ ஏற்றத்துடன்‌ தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி 66,600 என்ற புள்ளிகளுடன்‌ தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆன சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி 66,848 புள்ளிகளாக உள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்‌ நிஃப்டி 80 புள்ளிகள்‌ உயர்ந்து 19,760 புள்ளிகளில்‌ வர்த்தகமாகி வருகிறது.

NTPC, Indusind Bank, Power Grid Corp, Bajaj Finance, BPCL உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ ஏற்றம்‌ கண்டு வருகின்றன. Hero Hindalco, LTIMindtree, Hero Motocorp, Infosys, HUL உள்ளிட்ட நிறுவனங்களின்‌ பங்குகள்‌ சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd. -0.35 புள்ளிகள் குறைந்து 63.70 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம் 9.35 புள்ளிகளுடன் நிறைவடைந்து இன்று 0.51 புள்ளிகள் உயர்ந்து 10.81 புள்ளிகளாக வர்த்தமாகிறது.

அதே போல ARSS Infrastructure Projects Ltd., -0.15 புள்ளிகள் குறைந்து 63.75 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd., -0.63 புள்ளிகள் சரிந்து 39.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Views: - 265

0

0