கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2024, 8:27 am
sathy
Quick Share

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : 4 பேர் பலி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற இடத்தில் கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரும், பவானிசாகர் நெசவாளர் காலனி அருகே தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி ரஞ்சிதா, மகன் 8 வயது அபிஷேக் மகள் 7 வயது நித்திஷா உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.

தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு காரை ஒட்டி வந்த மோகன், சுஜித் விஷால் பத்ரி உள்ளிட்ட மூவருக்கு லோசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இறந்து போன 4 பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 236

0

0