கல்லூரி மாணவனுடன் ஜூனியர் மாணவி ஓட்டம்.. தேடிச் சென்ற சித்தப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2024, 12:57 pm

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மிதுன், 20 வயதான இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள சங்கரா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு டிப்ளமோ முடித்து உள்ளார்.

அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்த சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது 19 வயதான மகள் ஹர்சினி என்பரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.

இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர கண்டித்து உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை மிதுன் ஹர்சினியை கூட்டி வந்து விட்டதாக தெரிகிறது.

வீட்டில் ஹர்சினி இல்லாததை அடுத்து ஹர்சினியின் சித்தப்பா மணிகண்டன் மிதுனின் செல்போனுக்கு அழைத்து இது குறித்து கேட்டு உள்ளார்.

அப்போது தான் கணுவாயில் இருப்பதாக கூறி உள்ளார். இதை அடுத்து மணிகண்டன் ஹர்சினியின் அண்ணன் ஆதித்யா மற்றும் ரெட் டேக்சியில் டிரைவாக வேலை செய்து வரும் காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் செல்வகணபதி என்பருடன் கால் டேக்சியை எடுத்துக் கொண்டு தேடிச் சென்று உள்ளனர்.

அங்கு அவரை காணாததால் மீண்டும் அழைத்த போது வெவ்வேறு இடங்களைச் சொல்லி அலைக் கழித்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி.புதூர் சாலையில் செல்லும் போது அங்கு இருந்த பேக்கரி எதிரே சாலை ஓரமாக மிதுன், அவரது நண்பர் பிரகாஷ் மற்றும் ஆட்டோ டிரைவர் முத்து ஆகிய மூவரும் நின்று கொண்டு இருந்து உள்ளனர்.

அவர்களை பார்த்து மணிகண்டன் எனது அண்ணன் மகள் ஹர்ஷினியை எங்கே உள்ளார் என கேட்டு அவர்களுடன் வாக்கு வாதம் செய்து உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது மிதுன் தன் கையில் வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிகண்டன் இடது மார்பு மற்றும் இடது கை தோல்பட்டையில் குத்தி உள்ளார். தடுக்க சென்ற ரெட் டாக்ஸி டிரைவர் செல்வகணபதியின் வயிற்று பகுதியில் குத்திவிட்டு மூவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதனை அடுத்து காயமடைந்த செல்வகணபதி போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

அதற்குள் அங்கு இருந்தவர்கள் மணிகண்டனை கோவை கங்கா மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

மேலும் காயமடைந்த ரெட் டாக்ஸி டிரைவரான செல்வகணபதி கோவை சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

தப்பியோடிய குற்றவாளிகள் மூவரையும் துடியலூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து தேடி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!