விமான சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவர் உயிரிழப்பு.. கடைசி வரை கணவரை பார்க்காத மனைவி!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 6:21 pm

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்களத்தூர், இராமனுஜர் தெருவை சேந்தவர் சீனிவாசன்(48), இவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரேடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர்.

நேற்று விமானப்படை சார்பாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரை சென்று விட்டு வீடு திரும்பிய போது வெயில் காரணமாக, எம்.எல்.ஏ.விடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாகச நிகழ்ச்சியை காண சென்று வீடு திரும்பாத சீனிவாசனின் உயிரிழப்பு அவரது உறவினர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!