செல்போனால் அலறித் துடித்த முதியவர்.. ஒரே செயலில் சிதறியது எப்படி?
Author: Hariharasudhan3 February 2025, 4:10 pm
கோவையில், சார்ஜ் போட்ட படியே போன் பேசியதால் செல்போன் வெடித்துச் சிதறியதில் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோயம்புத்தூர்: கோவை மாநகர், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (64). இந்த நிலையில், இவர் தன்னுடைய செல்போனை நேற்றைய முன்தினம் இரவு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, ராமச்சந்திரனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து, செல்போனை சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமலேயே, அதனை எடுத்து பேசியுள்ளார். இவ்வாறு அவர் போன் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துள்ளது. இதில், ராமச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் குடும்பத்தினர், உடனடியாக ராமச்சந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்த தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!
இந்த விசாரணையில், ராமச்சந்திரன் செல்போனை சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் பேசியதால், அது சூடாகி வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராமச்சந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.