லண்டன் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று குணமடைந்துள்ளது

13 January 2021, 5:24 pm
ESI Hospital - updatenews360
Quick Share

கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து லண்டன் வழியாக விமானம் மூலம் கோவை வந்த 27 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில் அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

லண்டனில் பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், லண்டனில் இருந்து கோவை வந்த 96 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் கிடைத்தது. இந்த நிலையில், மற்ற நாடுகளில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு வெவ்வேறு நாடுகள் வழியாக கோவை வருபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஸ்பெயின்ல் இருந்து புறப்பட்ட ஒருவர் லண்டன், துபாய், மும்பை வழியாக கோவை வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த அவருக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு உருமாற்றம் பெற்ற வைரஸ் தாக்கம் இல்லை என்ற முடிவுகள் கிடைத்தது. தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அடுத்து 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 4

0

0