இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. கம்பி எண்ணும் காக்கிச் சட்டை!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 1:09 pm
திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் உறையூர் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காக்கி உடைந்திருந்த நபர் ஒருவர் பின்னால் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து அஞ்சலக ஊழியர் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியை காவல் துறை ஆய்வு செய்தபோது
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கணக்கியனுர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணி புரியும் கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சப்பூர் பகுதியில் வசித்து வரும் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வரவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
