எலிக்கு வைத்த பொறியில் சிக்கிய அரிய வகை நாகம் : மீட்க சென்ற வனத்துறையினரை பார்த்து படமெடுத்து நின்ற காட்சி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2022, 4:13 pm

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோதுமை நாகன் என்ற அரியவகை பாம்பு பிடிபட்டது. அந்த பாம்பை மீட்டு ஊதியூரில் உள்ள காப்புக்காட்டில் வனத்துறையினர் விட்டனர்.

காங்கேயம் அருகே உள்ள பல்லக்காட்டுப்புதூர் வட்டமலை தோட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. குடுப்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றார்.

இந்த தோட்டத்தில் அதிக அளவில் எலி, பெருச்சாளி போன்றவைகள் கோழிகளின் முட்டைகளை உடைத்துவிடுவதாகவும் தோட்டத்தில் உள்ள பயிர்களையும் நாசம் செய்கின்றது என்று அவைகளை பிடிக்க கூண்டு வைப்பது வழக்கம்.

அவ்வாறு நேற்று இரவு சிறிய கரித் துண்டுடன் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் இன்று காலை கூண்டில் எலி அல்லது பெருச்சாளி உள்ளதா என்று பார்த்துள்ளார். அதில் அறிய வகை பாம்பு இருந்துள்ளது.

இதை கண்டு அச்சமடைந்த விவசாயி பொன்னுசாமி அருகே உள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தினர். மேலும் அரியவகை பாம்பு சிக்கியது என்று ஊர் பொதுமக்கள் கூட்டமாக வந்து பார்த்துவந்தனர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் தனபால் மற்றும் பாபு இது அறியவகை கோதுமை நாக பாம்பு வகையை சேர்ந்தது என்றும் அதிக விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தார்.

சுமார் 2 வயதிற்கு மேல் உள்ள பாம்பு 5 அடி நீளம் உள்ளது. பின்னர் பாம்பு மாட்டிய கூண்டோடு சாக்கில் போட்டு கட்டி எடுத்து சென்ற வனத்துறையினர் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் காப்பு காட்டில் பாம்பை பத்திரமாக விட்டனர்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?