பூட்டை போட்டு ஒரே ஒரு தட்டு.. கல்லாவில் இருந்து பணத்தை திருடிய நபர்; காட்டிக் கொடுத்த CCTV..!

Author: Vignesh
5 June 2024, 12:35 pm

நத்தத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் மதுரை ரோட்டில் உள்ள வனச்சரக அலுவலகம் எதிரே அழகர் மளிகை கடை உள்ளது. இது நத்தம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த சந்தனம் (55) என்பவருக்கு சொந்தமானது. இவர் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க சந்தனம் சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.

மேலும் படிக்க: ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்.. டெல்லி பறந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்..!

உடனே கடைக்குள் சென்று தான் கடையில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பார்த்துள்ளார். அந்தப் பணம் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது 2 மர்ம நபர்கள் கடையின் உள்ளே நடமாட்டம் இருப்பதும் அவர் கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!