தலைமை ஆசிரியருடன் தகராறு : பள்ளி வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆசிரியர்!!!

Author: Udhayakumar Raman
7 December 2021, 7:55 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி தலைமை ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறில் பள்ளி வளாகத்திலேயே முதுநிலை ஆசிரியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த கோமல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1, 200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் முப்பத்தி ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பள்ளியின் தலைமை ஆசிரியராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் சக ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளியில் முதுநிலை விலங்கியல் ஆசிரியராக பணியாற்றும் செந்தில் என்பவர் வாரம் முதல் நாளில் பாட குறிப்பேட்டில் கையொப்பமிடுவதற்காக தலைமையாசிரியரிடம் பாடக்குறிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால் செந்திலுக்கும் தலைமை ஆசிரியை சித்ராவிற்கும் ஏற்கனவே மன வருத்தம் இருந்து வந்துள்ள நிலையில், செந்திலின் பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியை கையொப்பம் இடவில்லை. இதனால் பள்ளி வளாகத்திலேயே தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு செந்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி விழுந்த அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஒரு பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.

Views: - 231

0

0