சாலையை கடக்க முயன்ற யானையை சீண்டிய வாலிபர் : ஓட ஓட துரத்தி எச்சரிக்கை விடுத்த கொம்பன்.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 4:50 pm
Elephant Attack - Updatenews360
Quick Share

கோவை சின்ன தடாகம் ஆனைகட்டி சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானையை அருகில் சென்று வீடியோ எடுக்க முயன்ற நபரை துரத்திய யானை

கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் தற்போது 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் இரவு நேரத்தில் உணவிற்காக அருகில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சின்னத்தடாகம் பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறியுள்ளது.இந்த யானைகள் ஆனைகட்டி சாலையை கடந்து மருதமலை வனப்பகுதியை வனப்பகுதியை நோக்கி சென்றது.

அப்போது அங்கிருந்து இளைஞர்கள் யானைகளை சத்தம் எழுப்பி விரட்டினர். அப்போது தனியாக வந்த ஒற்றை ஆண் யானைக்கு அருகில் சென்று செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபரை திடீரென அந்த யானை துரத்தியது.

இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து ஓடிச் சென்று வாகனத்தில் ஏறி உயிர் தப்பினார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் யானைகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 384

0

0