ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் இருந்த வேஷ்டிகளை திருடிய வழக்கில் திருப்பம்.. கருப்பு ஆடாக இருந்த அரசு அதிகாரி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 6:38 pm
arrest
Quick Share

ஆட்சியர் அலுவலகத்தில் குடோனில் இருந்த வேஷ்டிகளை திருடிய வழக்கில் திருப்பம்.. கருப்பு ஆடாக இருந்த அரசு அதிகாரி கைது!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக இலவச வேஷ்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதியன்று கருவூலத்தை திறந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் மதிப்பிலான 12ஆயிரத்தி 500 இலவச வேஷ்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறை அளித்த புகாரின் கீழ் கடந்த நவம்பர் 7 ம் தேதி தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வேஷ்டிகளை 2 சரக்கு வாகனங்களில் எடுத்துசென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது விசாரணையில் 3.5லட்சம் ரூபாய்க்கு நில அளவையர் சரவணன் என்பவர் ஏற்கனவே நடந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேஷ்டிகள் என கூறி மோசடி செய்தது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 பேர்களிடம் இருந்து வேஷ்டிகள் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியாக நில அளவையர் சரவணன் என்பவரை தல்லாகுளம் காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தஞ்சாவூரில் பதுங்கியிருந்து சரவணனை தல்லாகுளம் காவல்துறையினர் தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சரவணின் 3 வங்கி கணக்கினை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் சரவணனை நிரந்தர பணி நீக்கம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 95

0

0