வியாபாரியின் மார்பில் கடித்து வைத்து அராஜகம்… குடிபோதையில் திமுக பஞ்சாயத்து தலைவரின் கணவர் வெறிச்செயல்… !!

Author: Babu Lakshmanan
20 November 2023, 5:03 pm
Quick Share

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் வைக்கோல் வியாபாரியை நெஞ்சில் கடித்து வைத்து குடிபோதையில் இருந்த திமுக பஞ்சாயத்து தலைவரின் கணவர் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா. தனக்கு சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிக்கொண்டு, வைக்கோல் வியாபாரமும் செய்து வருகிறார். கேரளா கொல்லங்கோட்டில் இருந்து பிக்கப் வண்டியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு, அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை எதிரில் உள்ள சத்தியசீலன் என்பவரின் காலி இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த அம்பராம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தி.மு.க.வை சேர்ந்த சகர் பானு என்பவரின் கணவர் பைஜில், குடிபோதையில் ‘யாருடா, பஞ்சாயத்து தலைவர் என்னை கேட்காமல் இங்கு வண்டியை நிறுத்தினது,’ என்று கெட்டவார்த்தை பேசி பிக் அப் வண்டியில் நான்கு சக்கரங்களிலும் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்.

இதை அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட்டில் இருந்து வந்த இளையராஜா, எதற்காக வண்டியில் காற்றை பிடுங்கினீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, அவரை தகாத வார்த்தைகள் திட்டியும், “யார் கேட்டு வண்டியை நிறுத்தினாய், தலைவர் என்கிட்ட கேட்க மாட்டியா..? என்று கூறி இளையராஜாவை கையால் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர், அவரது நெஞ்சில் கடித்து காயப்படுத்தியும் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து தலையில் அடுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் இளையராஜாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இளையராஜா கொடுத்த புகாரின் பெயரில் ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வைக்கோல் வியாபாரி நெஞ்சில் கடித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 109

0

0

Leave a Reply