தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் : விழுந்து விழுந்து சிரித்த மருத்துவர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 7:23 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் (வயது 38) சின்னகுஞ்சு. இவர் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை தலையில் பலமாக தாக்கி விட்டார் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து பதறிப்போன ஆஸ்பத்திரி ஊழியர்கள் பெண்ணின் தலையை பரிசோதித்த பொழுது ரத்தத்திற்கு பதில் குங்குமமாக வந்துள்ளது.

இதனால் மிரண்டு போன ஊழியர்கள் செய்வதற்காக திகைத்து நின்றனர். மேலும் அந்தப் பெண் எனக்கு கடுமையாக வலிக்கிறது காப்பாற்றுங்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார் இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

அங்கே கூடியிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டுக்காரர்களை பலி வாங்குவதற்காக குங்குமத்தை தலையில் பூசிக்கொண்டு வந்து நடித்தது தெரியவந்தது. இதனை அடுத்து பெண்ணை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!