இளைஞரின் உயிரை பறித்த உயர்மின் அழுத்த கம்பி: சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

By: Aarthi
8 October 2020, 3:24 pm
vrn death - updatenews360
Quick Share

விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சுண்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தட்டிகாளை பாண்டியன். இவரது மகன் சரவணன், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்தே ஆன்லைனில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியில் சென்ற உயர் மின்அழுத்த கம்பி அறுந்து சரவணன் மீது விழுந்ததது. இதில் மின்சாரம் தாக்கி சரவணன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மின்சார துறையினர் உடனடியாக மின்இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் சரவணின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இச்சம்பவம் நடைபெற்றதாக கூறி, பொதுமக்கள் சுமார் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் உபகரணங்களை புதுப்பிக்க மின்சார துறையினருக்கு பரிந்துரைக்கப்படும் என போலீசார் கூறியதை அடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 45

0

0