ஆற்றின் நடுவே சிக்கிக் உயிருக்கு போராடிய இளைஞர் : இயற்கை உபாதை கழிக்க சென்ற போது செல்போனில் மூழ்கியதால் விபரீதம்.. (வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 11:57 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபூண்டி மணிமுக்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிமுக்தா ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க சென்ற வாலிபர் கரை திரும்ப முடியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, தீயணைப்புத்துறையினர் உடனே வந்து இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகரித்த போது, இளைஞர் செல்போனை பயன்படுத்தியதால் கவனிக்க தவறியது அவரிடம் நடத்தப்படட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன் அறிவிப்பு இன்றி திறக்கப்பட்ட தண்ணீரால் வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முன் அறிவிப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?