தொடர்ந்து தாமதமாகும் ஆவின் பால் விநியோகம்… ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு முகவர்கள் போராட்டம்

Author: Babu Lakshmanan
9 March 2023, 11:31 am

மதுரையில் பல் விநியோகம் தொடர்ந்து தாமதம் செய்வதைக் கண்டித்து ஆவின் மத்திய பால் பண்ணையை முகவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

மதுரையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆவின் நிர்வாகம் டெப்போக்களுக்கு தாமதமாக பால் விநியோகம் செய்து வருகிறது. தாமதமாக பால் எடுத்து வரும் வாகனங்களை முகவர்கள் அடிக்கடி திருப்பி அனுப்பும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. இன்றும் கூட பல டெப்போக்களுக்கு பால் வாகனம் தாமதமாக சென்றதால் பால் வாகனத்தை முகவர்கள் திருப்பி அனுப்பினர்.

மதுரை மாநகர் கரிசல்குளம், விளாங்குடி, ஆனையூர், நெல்பேட்டை, பேச்சியம்மன்படித்துறை, சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் ஆவின் பால் விநியோகம் தாமதமான நிலையில், அந்த பகுதி டெப்போக்களுக்கு செல்லும் பால் விநியோக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் விநியோகம் தாமதமாவதை கண்டித்து ஆவின் டெப்போ முகவர்கள் 25க்கும் மேற்பட்டோர் மதுரை சாத்தமங்கலம் ஆவின் மத்திய பால்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Sundari Serial Actress Gabriella Sellus Blessed with Baby ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!