வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல்.. ஊராட்சி தலைவர் மீது பாஜகவினர் பரபரப்பு புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan8 மே 2023, 6:55 மணி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சியில் மீன் சந்தை ஒன்று உள்ளது. இங்கு வியாபாரிகளிடம் மகமை வசூல் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது ஊராட்சி தலைவராக உள்ள செல்வகுமார் என்பவர் ஊருக்குள் வரும் அனைத்து வாகன ஓட்டிகளிடமும் அடாவடியாக வசூல் செய்வதாக திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இன்று அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் – செட்டிகுளம் ஊராட்சியில் பால், கீரை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வியாபாரிகளிடம் ஊராட்சி தலைவர் பணம் வசூல் செய்கிறார்.
இதனால் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணம் வசூல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
0
0