ஏசி பழுது பார்ப்பது போல வீட்டை நோட்டமிட்டு ‘ஆடி‘ காரை ஆட்டையை போட்ட கும்பல் : 13 மணி நேரத்தில் சிக்கினர்!!

21 June 2021, 6:25 pm
Audi Car Theft - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : ஏசி பழுதுபார்க்க சென்ற வீட்டில் இருந்த விலை உயர்ந்த ஆடி காரை தன் நண்பர்களுடன் சேர்ந்து திருடிய கும்பலை ஜிபிஆர்எஸ் கருவி மூலம் 13 நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நயப்பாக்கத்தில் வசிக்கும் ரவி (வயது 49) என்பவர் வீட்டில் நேற்று காலையில் சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து 3 LED TV, 1 Laptop மற்றும் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆடி காரையும் திருடி எடுத்து சென்றுவிட்டனர்.

திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் மேற்படி வழக்கு சம்மந்தமாக மாவட்ட எஸ்பி டாக்டர் சுதாகர் உத்திரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இதுசம்பந்தமாக மேலும் CCTV பதிவுகளை ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜய்சந்திரன்(வயது 24), பிரவின்(வயது 24), லோகேஷ்(வயது 22), மற்றும் பிரகாஷ்(வயது 23), ஆகியோர்களை குற்றம் நடந்த 13 மணிநேரத்திற்குள் கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 90 லட்சம் மதிப்புள்ள களவுப்பொருட்கள் விலை உயர்ந்த ஆடி கார், டி.வி-3, லேப்டாப் மற்றும் கேமரா ஆகியவைகளை மீட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த திருட்டு சம்பந்தமாக விஜய் சந்திரன் கூறியதாவது, ஓரு சினிமா படத்தில் நடிகர்கள் காரை கடத்துவது போன்ற டெக்னிக்கை பார்த்து அதே போல் செய்யத் துணிந்தேன். நயபாக்கத்தில் அவ்வப்போது ஏசி ரிப்பேர் செய்வது போன்று ரவி அவர்களின் வீட்டில் நுழைந்து அவர்களின் வசதிகளையும் சுற்றுப்புறத்தையும் நோட்டமிட்டேன்.

பின்னர் என்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டில் இருந்த லேப்டாப், கேமரா, எல்ஈடி டிவி ஆடி கார் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினோம் . ஆடி காரில் ஜிபிஆர்எஸ் என்ற கருவி உள்ளதால் அதன்மூலம் எங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விட்டார்கள் என புலம்பி உள்ளான்.

Views: - 300

0

0