கொரோனா சோதனையை வாகன சோதனை என நினைத்து பைக்கை திருப்பிய போது விபத்து : புதுமாப்பிள்ளை பலி!!

2 November 2020, 7:34 pm
Accident Dead - Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதீன்(வயது 23) மற்றும் அவருடைய நண்பர் சுஹேல் (வயது 22) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது பெங்களூர் சென்னை தேசியே நெடுஞ்சாலை நெகுந்தி சுங்கச்சாவடி பகுதியில் சுகாதார துறையினர் கொரோனா முகாம் அமைத்து கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த மதீன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கருதி இருசக்கர வாகனத்தை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பி உள்ளார்.

அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மதீன் சம்பவ இடத்தில் பலியானார். சுஹேல் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த சுஹேல் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதீன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியான மதீனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி பெங்களூரில் திருமணம் முடிந்தது குறிப்படத்தக்கது.

Views: - 27

0

0